Advertisement

Responsive Advertisement

ருபே பிரைம் வாலிபால் லீக் - சென்னை அணிக்கு நவீன் ராஜா கேப்டன்

சென்னை: ருபே பிரைம் வாலிபால் லீக் போட்டியின் 2-வது சீசன் வரும் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 5-ம் தேதிவரை நடைபெறுகிறது. பெங்களூரு ஹைதராபாத், கொச்சிஆகிய 3 இடங்களில் போட்டிகள்நடத்தப்பட உள்ளது. இந்தத்தொடரில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா தண்டர்ஸ் போல்ட்ஸ். சென்னை பிளிஸ்ட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், சென்னை பிளிட்ஸ் அணிக்கான சீருடை அறிமுக விழா மற்றும் கேப்டன் அறிவிப்பு ஆகியவை சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர் விக்ராந்த்ரெட்டி, இணை உரிமையாளர்ஹனிமிரெட்டி ஆகியோர் இணைந்து அணிக்கான சீருடையை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அணியின் கேப்டனாகநவீன் ராஜா ஜேக்கப் அறிவிக்கப் பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments