Advertisement

Responsive Advertisement

FIFA WC 2022 | ஹாரி கேனின் முயற்சி வீண் - இங்கிலாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி 1962-ம் ஆண்டு சாம்பியன் பட்ட அந்தஸ்துடன் களமிறங்கி கோப்பையை மீண்டும் வென்றது. இந்த சாதனையை இதுவரை எந்த அணியும் தகர்க்கவில்லை. இம்முறை கத்தாரில் இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியாக பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் களத்தில் ஆக்ரோஷம் காட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments