Advertisement

Responsive Advertisement

36-வது தேசிய விளையாட்டு | ஒரே நாளில் தமிழகத்துக்கு 4 தங்கப் பதக்கம் - ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோஸி மீனா, அஜித் அசத்தல்

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியாணாவின் ரமிதா, அர்ஷ்தீப் சிங் ஜோடி 17-9 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தின் ஸ்ரேயா அகர்வால், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. தமிழகத்தின் நர்மதா நித்தின், ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் ஜோடி 16-12 என்ற கணக்கில் பஞ்சாப்பின் சமிக் ஷா திங்க்ரா, அர்ஜூன் பபுதா ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேசத்தின் அபிஷேக் பால் பந்தய தூரத்தை 16:34.68 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சர்வீசஸ் அணியைச் சேர்ந்த கார்த்திக் குமார் (14:08.24) வெள்ளிப் பதக்கமும், சவான் பர்வால் (14:10.53) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments