புனே: ஐபிஎல் டி 20 தொடரில் டேவிட் மில்லரின் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. புனேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக ஹர்திக் பாண்டியா களமிறங்காததால் குஜராத் அணியை ரஷித் கான் வழிநடத்தினார். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில், 73 ரன்கள் விளாசினார். அம்பதி ராயுடு 46, ராபின் உத்தப்பா 3, மொயின் அலி 1, ரவீந்திர ஜடேஜா 22, ஷிவம் துபே 19 ரன்கள் சேர்த்தனர்.
170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் தொடக்கத்தில் ஆட்டம் கண்டது. ரித்திமான் சாஹா 11, ஷுப்மன் கில் 0, விஜய் சங்கர் 0, அபிநவ் மனோகர் 12 ரன்களில் நடையை கட்டினர். 48 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டேவிட் மில்லர் மட்டையை சுழற்றினார். நிதானமாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரஷித் கான் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments