Advertisement

Responsive Advertisement

தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி: பிஹார், ஹரியானா அணிகள் வெற்றி

கோவில்பட்டியில் நடக்கும் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் பிஹார், ஹரியானா, சண்டிகர், ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா அணிகள் வெற்றி பெற்றன.

நேற்று காலையில் நடந்த முதல் ஆட்டத்தில் பிஹார் அணியும், கோவா அணியும் மோதியதில், 14 - 0 என்ற கோல் கணக்கில் பிஹார்அணி வென்றது. 2-வது ஆட்டத்தில்ஹரியானா அணியும், வங்க அணியும் மோதியதில், 8 - 0 என்ற கோல்கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் திரிபுராஹாக்கி அணியினர் பங்கேற்க இயலாததால் அதன் எதிரணியான தெலங்கானா வென்றதாக அறிவிக்கப்பட்டது. 4-வது ஆட்டத்தில் சண்டிகர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியையும், 5-வது ஆட்டத்தில், ஆந்திரா அணி 7 - 1 என்ற கோல் கணக்கில் மிஷோரம் அணியையும் வீழ்த்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments